உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் தேங்காய் தொடும் முகூர்த்தம்

திருப்பரங்குன்றம் கோயிலில் தேங்காய் தொடும் முகூர்த்தம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா நவ., 21 முதல் 30 வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, மாலைகள், மேளதாளத்துடன் சிவாச்சார்யார்கள், பேஷ்கார், மணியம் கோயிலில் இருந்து அலுவலகம் சென்றனர். அங்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமிக்கு மரியாதை செய்து, தேங்காய் பழம் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் தேங்காய் தொட்டு கொடுத்தார். அவரிடம் கார்த்திகை திருவிழா விபரங்கள் அடங்கிய குறிப்பு வழங்கப்பட்டு விழாவிற்கான நாட்கள் குறிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !