இருமுடி யாத்திரை ஊரடங்கால் மாற்றம்
ADDED :1805 days ago
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன்சுவாமி கூறியதாவது; சபரிமலை யாத்திரை செல்ல முடியாத ஐயப்ப பக்தர்களுக்காக இந்தாண்டு ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து முறையாக விரதம் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் இருமுடியை, சபரிமலையில் செலுத்துவது போல், ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதியிலும் உள்ள பக்தர்கள் இருமுடிக்கட்டுடன் வரலாம், என்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் போது சபரிமலை செல்ல முடியாத ஐயப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பூஜையை நிறைவேற்றினர். மோகன்சுவாமி