உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ரத்து

திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ரத்து

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவானது, கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில், ஆட்டுக்கிடா, புருஷாமிருகம், கிளி என, பல வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, ஊர்வலம் நடைபெறும்.

மேலும், பிரதான விழாவாக, சூரசம்ஹார வைபவத்தில், கந்தசுவாமி, வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்மனை விரட்டிச்சென்று, வதம் செய்வார். பின், திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடையும். இந்நிகழ்வை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, இந்தாண்டு கந்தசஷ்டி விழா, இக்கோவிலில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர் சக்திவேல் கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தாண்டு கந்த சஷ்டி விழா கிடையாது. உற்சவங்கள், கோவில் உள்புறப்பாடு மட்டும் நடைபெறும். வழக்கமான தரிசனத்திற்கு அனுமதி உண்டு, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !