கோயில் தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED :1809 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மண்டல அமைப்பாளர் துரைராஜ், துணை செயலாளர் நரசிங்கமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் மணியம் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் இதயராஜன், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் சமதர்மபாண்டியன் பேசினர். கோயில் பணியாளர்களுக்கு பணப்பலன், ஓய்வூதியம், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.