வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ADDED :1877 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. அட்டவீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம் திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில். ஐப்பசி மகா பைரவ பூஜை நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலசஸ்தாபனம், பஞ்சாண பூஜை, பஞ்சாவரண பூஜை, மதிருத்ர பூஜை, மதிருத்ர ஹோமம், அஷ்ட பைரவ பூஜை, பைரவர் மூலமந்திரம், மாலா மந்திர ஹோமம், பூர்ணாகுதி கடம் புறப்பாடாகி, அந்தகாசூர சம்கார மகாபைரவர்க்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.