உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய்யால் நேர்ந்த கொடுமை

பொய்யால் நேர்ந்த கொடுமை


சீரியா நாட்டின் தளபதியான நாகமான் என்பவன் குஷ்டத்தால் அவதிப்பட்டான்.  தீர்க்கதரிசியான எலிசாவின் உதவியால் குணம் பெற்றான். அதற்கு அன்பளிப்பாக காணிக்கை தருவதாக தெரிவித்தும் எலிசா அதை ஏற்க விரும்பவில்லை. வருத்தமுடன் நாகமான் செல்லும் வழியில் எலிசாவின் பணியாளன் கேயாசி பின்தொடர்ந்து வந்து, ‘‘தளபதியாரே! உங்களிடம் அன்பளிப்பை வாங்கிவரும்படி என்னை எஜமானர் அனுப்பினார். அவரது இரண்டு மகன்களுக்கு ஆளுக்கொரு தாலந்து வெள்ளிப்பணமும், ஆடையும் தாருங்கள்’’ எனபொய் சொன்னான்.  அதை நம்பி சொன்னதை விட இருமடங்கு இரண்டு வெள்ளியும், இரண்டு ஆடைகளும் காணிக்கை கொடுத்தான். உடனடியாக தன் வீட்டுக்கு சென்று பொருட்களை மறைத்து வைத்தான் கேயாசி. இதையறிந்த தீர்க்கதரிசி கோபமுடன், ‘‘நாகமானின் குஷ்ட ரோகம் உன்னையும், உன் சந்ததியையும் பீடிக்கும்’’ என கேயாசியை சபித்தார். வளமாக வாழலாம் என பலரும் பூமியில் சகஜமாக பொய் சொல்கிறார்கள். ஆனால் பொய்யர்கள் அக்னியும், கந்தகமும் எரிகின்ற கடலிலே பங்கு பெறுவர் என பைபிள் எச்சரிக்கிறது. அதுபோலவே குஷ்டத்தால் அவதிப்பட்ட கேயாசி  சமூகத்தை விட்டே விலகி வாழும் கொடுமைக்கு ஆளானான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !