மூலநாத சுவாமி கோயிலில் நவ.,20 சூரசம்ஹாரம்
ADDED :1807 days ago
சோழவந்தான்; சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாத சுவாமி கோயிலில் வள்ளிதெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. கந்தசஷ்டி உற்ஸவத்தை முன்னிட்டு நவ.,15ல் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், நவ.20 மாலை 5:00 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல், 6:00 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. நவ.,21 காலை சுவாமியின் அன்னபாவாடை தரிசனம், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம்நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பிரோதஷ கமிட்டியினர் செய்கின்றனர்.