ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பம் வரவேற்பு
 சென்னை: நடப்பாண்டு ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர், டிசம்பர், ௧௦க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்திய ஹஜ் குழு மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில், ஹஜ் பயணம் செல்ல, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஹஜ் விண்ணப்பத்தின் முழு செயல்முறையும், சவுதி அரேபிய அரசின் இறுதி வழிகாட்டுதலுக்கு உட்பட்டது.www.hajcommittee.gov.inஎன்ற, இணையதளம் வழியாகவும், கூகுல் பிளே ஸ்டோரில் உள்ள, மும்பை இந்திய ஹஜ் குழு மொபைல் செயலியை, மொபைல் போனிலும் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். விண்ணப்பிக்க, டிசம்பர், 10 கடைசி நாள். ஹஜ் புனித பயணம் குறித்த விபரங்களுக்கு, வழிகாட்டுதல்களை படிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 022 -- 2210 7070 என்ற, எண்ணை தொடர்பு கொள்ளலாம்.