குருவித்துறை குருபகவான் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்
                              ADDED :1812 days ago 
                            
                          
                           சோழவந்தான்; குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு இன்று (நவ.,13) லட்சார்ச்சனை துவங்கியது. நவ.,15 இரவு 9:4௯ மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசிகாரர்களுக்கும் பரிகார பூஜை இன்று (நவ.,13) காலை 9:30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. நவ.,15 காலை 11:30 மணிக்கு முடிகிறது. ரூ.100 செலுத்தும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 10 வயதிற்கு கீழ், 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.