உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் கோவில்களில் பக்தர்கள் கேதார கௌரி நோன்பு

திருக்கோவிலூர் கோவில்களில் பக்தர்கள் கேதார கௌரி நோன்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று கேதாரகவுரி நோன்பு எடுத்தனர்.

தீபாவளி தினத்தில் நோன்பு எடுப்பவர்கள் ஒரு பிரிவும், அதற்கு அடுத்த தினமான அமாவாசை தினத்தில் கேதாரகவுரி நோன்பு எடுப்பது ஒரு தரப்பினரும் என தீபாவளி தொடர்ந்து இரண்டு நாட்கள் நோன்பு எடுக்கும் நிகழ்வு கோவில்களில் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி நோன்பு, கேதாரகவுரி நோன்பு ஒரே நாளில் வந்ததால் பெரும்பான்மையான வர்களின் வீடுகளில் சைவ தீபாவளியாக கொண்டாடப்பட்டது.

காலை முதல் விரதமிருந்து கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தீபாவளி நோன்பை எடுத்தனர். மதியம் 2:00 மணிக்கு அமாவாசை பிறப்பதால் அமாவாசை நோன்பு எடுக்கும் பக்தர்கள் மதியம் 2:00 மணிக்கு மேல் கோவில்களுக்கு சென்று நோன்பு எடுத்தனர். திருக்கோவிலூரில் ஆங்காங்கே உள்ள கோவில்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், வீரட்டானேஸ்வரர் கோவில் நவராத்திரி மண்டபத்தில் அம்பாள் ஆவாகனம் செய்யப்பட்டு பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் நோன்பு எடுத்தனர். இரண்டு நோன்பும் ஒரே நாளில் வந்தாலும் அமாவாசை மதியத்திற்கு மேல் வந்ததால் நோன்பு எடுக்கும் இடத்தில் கூட்டம் இன்றி பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் நோன்பு எடுத்து சென்றதை பார்க்க முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !