கந்தசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
ADDED :1802 days ago
வீரபாண்டி: கந்தசாமி கோவிலில், கந்தசஷ்டி விழா தொடங்கியது. சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. வழக்கமாக, திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். ஆனால், நேற்று மூலவர் கந்தசாமிக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் அபி?ஷகம் செய்து, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமிக்கு, வெள்ளை பட்டு வஸ்திரம் சார்த்தி வெள்ளி கவசங்களில் காட்சி அளித்தார். வரும், 20ல், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. விழாவையொட்டி, தினமும் நடக்கும் கோவில் உலாவை நடத்தாமல், விதவித அலங்காரம் செய்து, பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும். கந்த சஷ்டி விழாவையொட்டி, கோவில் முழுதும், வண்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.