உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை பாலையம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை, மங்கள வாத்தியம்முழங்க, நவக்கிரக, கணபதி, லட்சுமி ஹோமங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10.20 மணிக்கு மூலஸ்தான பரிவாரமூர்த்திகள் கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீர் தெளிக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. சுற்று கிராமத்தினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் குமாரராஜன், செயலர்கள் மின்னல்ராஜ், நாகசங்கர், பொருளாளர் முருகேசன், தேவஸ்தான செயலர் பண்டாரமணி, டிரஸ்டி இளங்கோவன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !