பெரியகுளம் கோயில்களில் குரு பெயர்ச்சி பூஜை
பெரியகுளம்: பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழாவில் நேற்று முன்தினம் இரவு 9:48 க்கு தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மகா கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், சிறப்பு அபிேஷகம் மற்றும் கலசாபிேஷகம் பூஜைகள், குருபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி., தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா, பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ குருதட்சிணாமூர்தி சேவா சங்கம் ஆலோசகர் சி.சரவணன், பக்தர்கள் செய்தனர். பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. ஆண்டிபட்டி: -சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கு வளாகத்தில் உள்ள குருபகவான் சிலை முன் யாகம் வளர்த்து சிறப்பு அபிேஷகங்கள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.