உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவகிரகங்களால் உலகம் இயங்குகிறது: காமாட்சிபுரி ஆதீனம்

நவகிரகங்களால் உலகம் இயங்குகிறது: காமாட்சிபுரி ஆதீனம்

பல்லடம்: நவக்கிரகங்களால் உலகம் இயங்குகிறது என, பல்லடம் அருகே நடந்த குரு பெயர்ச்சி விழாவில், காமாட்சிபுரி ஆதீனம் கருத்து தெரிவித்தார். பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில் குருபெயர்ச்சி விழா நடந்தது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் பங்கேற்று சிறப்பு வேள்விகள், 1008 தீர்த்த கலச அபிஷேகம், மற்றும் லட்சார்ச்சனையை நடத்தினார்.

அவர் பேசியதாவது: தவம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். தவம் என்பது ஊருக்கு உழைப்பதாகும். தான் எடுத்த காரியத்தை நிறைவேற்றும்படி செய்வதே தவம். கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நவக்கிரகங்களால் இவ்வுலகம் இயங்குகிறது. சனி எப்படி தவமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றாரோ, அதுபோல் வியாழ பகவான் குரு என்ற பட்டத்தைப் பெற்றார். குரு பகவான் பெயர்ச்சியாகும் போது புனித நதிகளில் நீராடுவது சிறப்பு. சாஸ்திரங்கள் பொய்யானவை அல்ல. அனைத்துக்கும் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, பரிகார ராசிகளுக்கு சிறப்பு அர்ச்சனைகள், வழிபாடுகள் நடந்தன. நவகிரகங்கள், மற்றும் மூலவர் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. யானை வாகனத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !