உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் ஐயப்பனுக்கு அபிஷேக அலங்கார பூஜை

அன்னூர் ஐயப்பனுக்கு அபிஷேக அலங்கார பூஜை

அன்னூர்: அன்னூர், ஐயப்பன் கோவிலில், நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். கார்த்திகை முதல் நாளான நேற்று, அன்னூர், ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 47வது ஆண்டாக, மாலை அணிவித்தல் துவங்கியது. அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து ஐயப்பனுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குருசாமி துரைசாமி, 12 ஐயப்ப பக்தர்களுக்கு, மாலை அணிவித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தர்ம சாஸ்தா சேவா சங்க தலைவர் வெங்கடாசலம், முன்னாள் தலைவர் முனியப்பன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரவீன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !