நெட்டப்பாக்கம் கோவிலில் கந்தர் சஷ்டி பெருவிழா
ADDED :1872 days ago
புதுச்சேரி: நெட்டப்பாக்கம் செல்வ முத்துகுமரசாமி கோவிலில் கந்தர் சஷ்டி பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள செல்வமுத்துகுமரசாமிக்கு கந்தசஷ்டி பெருவிழா நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி வரை தினசரி சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், தீபாரதனை மற்றும் வீதியுலா நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான கந்தர் சஷ்டி விழா வரும் 20 தேதி மாலை 6.00 மணிக்கு நடக்கிறது.