உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருபெயர்ச்சி வழிபாடு: திருப்பூர் பக்தர்கள் பரவசம்

குருபெயர்ச்சி வழிபாடு: திருப்பூர் பக்தர்கள் பரவசம்

திருப்பூர்: குருபெயர்ச்சியை முன்னிட்டு, சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தன.தனுசு ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த குருபகவான், நேற்று முன்தினம் இரவு, மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி மற்றும் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று காலை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, மஞ்சள் வஸ்திரம் மற்றும் மஞ்சள் மலர்மாலைகள், சுண்டக்கடலை மாலைகள் அணிந்து, குரு பகவான் அருள்பாலித்தார். பக்தர்கள், நீண்ட இடைவெளியுடன் சென்று தரிசனம் செய்தனர்.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், மாதவனேஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும், குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !