திருப்பரங்குன்றம் குருபெயர்ச்சி விழா
ADDED :1880 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவக்கிரகங்களுடன் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு யாகசாலை பூஜை முடிந்து அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்படியானது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு யாகசாலை பூஜை முடிந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது.ஹார்விபட்டி பால முருகன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கும், விளாச்சேரி ஈஸ்வரன் கோயில் தட்சிணாமூர்த்திக்கும் சிறப்புபூஜை நடந்தது.