முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா; நாளை சூரசம்ஹாரம்
ADDED :1864 days ago
பரமக்குடி : பரமக்குடியில் அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை சூரசம்ஹார லீலை நடக்கிறது. பரமக்குடி தரைப்பாலம் சுப்பிரமணியசுவாமி கோயில், ஐந்து முனை ரோடு அருகில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோயில், பால்பண்ணை முருகன் கோயில் என நவ., 15 அன்று கந்தசஷ்டி விழா காப்புக்கட்டுடன் துவங்கியது.தினமும் உற்ஸவம், மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகின்றனர். முக்கிய நிகழ்வாக முருகன் சக்தி வேல் தாங்கி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நாளை மாலை நடக்கிறது.தொடர்ந்து நவ.,21 அன்று தெய்வானையுடன் முருகன் திருக்கல்யாணத்துடன் விழா நிறைவடையும்.