வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்
ADDED :1796 days ago
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், முருகப்பெருமான் பாத ரட்சை உடன் அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் மகா கந்தசஷ்டி விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அதிகாலை 4மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதிகாலை முத்து அலங்காரத்திலும், மதியம் சந்தணக்காப்பு அலங்காரத்திலும் சுவாமி காட்சியளித்தார். இரவு ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இரவு 8 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்