பழநியில் கந்த சஷ்டி விரதம் முடித்த பக்தர்கள்
ADDED :1792 days ago
பழநி : பழநியில் நைவேத்ய பிரசாதத்துடன் பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் முடித்தனர். கந்தசஷ்டி விழாவிற்காக நவ.15 முதல் காப்பு கட்டி 6 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள் திருஆவினன்குடி கோயிலில் விரதத்தை நிறைவு செய்தனர்.இதற்காக வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து நைவேத்ய பிரசாதம் தயாரித்து தண்டு விரதத்தை வீடுகளிலும், கிராம கோயில்களிலும் குழுவாகவும், தனித்தனியாகவும் நிறைவு செய்தனர். இன்று (நவ.21) திருக்கல்யாணம் முடிந்தவுடன் கட்டிய காப்பை கழற்றி பக்தர்கள் விரதம் முடிப்பர்.