அங்கலக்குறிச்சி சமுக்தியாம்பிகைக்கு மானசாபிஷேக விழா
ADDED :1819 days ago
ஆனைமலை: கோட்டூர், அங்கலக்குறிச்சி சமுக்தியாம்பிகை கோவிலில், மானசாபிஷேக விழா நடந்தது.கோட்டூர் அடுத்த அங்கலக்குறிச்சி ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை கோவிலில் நேற்று, மானசாபிஷேக விழா நடந்தது. இதில், அம்மனுக்கு, ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, நெல்லி உள்பட, 18 வகையான, 300 கிலோ பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.மேலும், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மானசாபிஷேகத்தை முன்னிட்டு, திரை விலக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் அபிஷேகம் நடந்தது.