உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மணீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் கும்பாபிஷேகம்

அம்மணீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் கும்பாபிஷேகம்

 பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி விநாயகர், முருகப்பெருமான், அம்மணீஸ்வரர், நவகிரகங்கள் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 27ம் தேதி நடக்கிறது. இன்று மாலை, 5:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு, முதற்கால வேள்வி, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.நாளை (26ம் தேதி) காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 10:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால வேள்வி, திரவியாஹுதி, இரவு, 9:00 மணிக்கு இறை சக்திகளை எண் வகை மருந்து சாற்றி கருவறையில் நிலைப்படுத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.வரும், 27ம் தேதி காலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி, திரவியாஹுதி உள்ளிட்ட பூஜைகளும்; காலை, 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் திருக்குடங்கள் உலா, கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு மகா அபிஷேகம், தச தரிசனமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !