மலைகோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ரத்து
ADDED :1819 days ago
ஓசூர்: ஓசூர் மலை மீதுள்ள, மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், வரும், 29 ல் நடக்க இருந்த மஹாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மலைமீது மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை மாதம் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். வரும், 29 மாலை மஹாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்க இருந்தது. கொரோனா காரணமாக, தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, நேற்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும், 29 காலை, 7:00 முதல், மதியம், 2:00 மணி வரை, மாலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து, தரிசனம் செய்ய வேண்டும் என, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.