உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடைகளுக்கான ஏலம் நடக்காததால் பாரியூர் குண்டம் விழா நடப்பதில் சந்தேகம்

கடைகளுக்கான ஏலம் நடக்காததால் பாரியூர் குண்டம் விழா நடப்பதில் சந்தேகம்

கோபி: கொரோனாவால், தற்காலிக கடைகள் நடத்துவதற்கான ஏலம், இன்னும் துவங்காததால், பாரியூர் குண்டம் திருவிழா நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஜனவரியில் குண்டம் தேர்த்திருவிழா நடக்கும். டிசம்பரில் பூச்சாட்டுதலுடன், திருவிழா துவங்கி, ஜனவரியில் சந்தனகாப்பு அலங்காரம், திருக்குண்டம், திருத்தேரோட்டம், மலர்பல்லக்கு ஆகிய நிகழ்வுகள் நடக்கும். இந்த சமயத்தில், 13 நாட்கள் தற்காலிக கடைகள் நடத்த, சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற, கோவில் நிர்வாகம் சார்பில், நவம்பரில் ஏலம் நடத்தப்படும். ஆனால், நடப்பாண்டில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு தளர்வால், செப்.,1 முதல், சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கமாக, நவம்பர் மூன்றாம் வாரத்துக்குள், தற்காலிக கடைகள் நடத்த, சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெறுவதற்கான ஏலம் நடந்திருக்கும். ஆனால், தற்போது வரை ஏலம் நடக்காததால், குண்டம் தேர்த்திருவிழா நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். கடந்த, 2019ல், நடந்த ஏலத்தில், 63 லட்சம் ரூபாய்க்கு கடைகள் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !