பயம் நீங்க
ADDED :1799 days ago
குடியாத்தம், சந்தப்பேட்டையில் கவுண்டின்ய நதிக்கரையின் அருகே அமைந்துள்ளது சீதாராம் ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில். இக்கோயில் அனுமனை தரிசித்தால் கடன் தொல்லை, நோய்கள், நவகிரக தோஷங்கள், மன பயம், எம பயம் போன்றவை நீங்கும். வியாபாரம் அபிவிருத்தியடையும், தடை நீங்கி திருமணம் நடக்கும். கார்த்திகை மாதத்தில் இக்கோயிலை 1,008 முறை வலம் வருவோருக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.