சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2112 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வரர் திருக்கோவிலில் நேற்று மாலை நந்திஎம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடந்தது. முன்னதாக பால், நெய், தயிர், என 16 திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்தி எம்பெருமான் ,சோழீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.