உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி கோவிலில் ரத உத்சவம், கரக திருவிழா

மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி கோவிலில் ரத உத்சவம், கரக திருவிழா

மல்லேஸ்வரம்: மல்லேஸ்வரம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவிலில், வரும் 18 முதல், 20ம் தேதி வரை ரத உத்சவம் மற்றும் கரக திருவிழா நடக்கிறது.


முதல் நாளான, 18ல், மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ சர்க்கிள் மாரம்மா கோவிலில் இருந்து கோதண்டராமபுரம் வரை பால்குட ஊர்வலம்; இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு, பக்தர்கள் கைகளால், பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இரண்டாம் நாளான, 19ல், காலை 6:00 மணிக்கு மாங்கல்ய தாரணை, சிறப்பு பூஜை, மஹா மங்களாரத்தி; பகல் 12:00 மணிக்கு நைவேத்யம், மஹா மங்களாரத்தி பூஜைகள் ஆரம்பம்; இரவு 7:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்படும் கரகம், கோதண்டராமபுரம், வயாலிகாவல், மல்லேஸ்வரம் வழியாக, அதிகாலை 2:00 மணிக்கு கோவிலை வந்தடையும். மூன்றாம் நாளான 20ல், காலை 9:30 மணிக்கு சுமங்கலி பூஜை; மதியம் 12:00 மணிக்கு கோதண்டராமபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அன்னதானம்; மாலை 5:30 மணிக்கு கோதண்டராமபுரம் பிரதான சாலையில் துவங்கும் ரத உத்சவம், வயாலிகாவல், குட்டஹள்ளி பிரதான சாலை, மல்லேஸ்வரம் எட்டாவது குறுக்கு சாலை, சம்பிகே பிரதான சாலை, காடு மல்லேஸ்வரா கோவில் வழியாக சென்று, அதிகாலை 4:00 மணிக்கு கோவிலை வந்தடையும். அதுபோல, 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்படும் கரகம், சம்பிகே பிரதான சாலை, மல்லேஸ்வரம், வயாலிகாவல், குட்டஹள்ளி வழியாக, அதிகாலை 4:00 மணிக்கு கோவிலை வந்தடையும். விழாவில், பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருளை பெறுமாறு கோவில் தரப்பில், கரகம் எடுக்கும் சுதாகர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !