உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு புது மழை நீர் வடிகால்

கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு புது மழை நீர் வடிகால்

 மயிலாப்பூர்; மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், புது மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை, மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மழை நீர் சேகரமாக, பல்வேறு பகுதிகளில் இருந்தும், வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.அந்த வடிகால்கள் மூலம், குளத்தின், நான்கு முனைகளின் வழியாக, குளத்திற்குள் தண்ணீர் சேகரமாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்திய கன மழையின்போது, குளத்தை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.கமிஷனரின் ஆலோசனைப்படி, தெற்கு மாட வீதி சாலையில் தேங்கும் நீரை, குளத்தில் சேமிக்கும் விதமாக புதிதாக, 60 அடி நீளத்திற்கு வடிகால் குழாய் பொருத்தும் பணியை, மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !