உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஜொலிக்கும் சுவாமி சிலைகள்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஜொலிக்கும் சுவாமி சிலைகள்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், சுவாமி சிலைகளுக்கு, வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றன.கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு வாரநாட்களில், 100க்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.அம்மன் கோவிலுக்கு முன்பாக, குண்டம் இறங்கும் இடம் அருகே பக்காசூரன் சிலை உட்பட சிலைகளின் சன்னதிகள் உள்ளன. தற்போது இந்த சுவாமி சிலைகளுக்கு, வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றன.கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த சுவாமி சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெறும். அதன் படி, தற்போது வர்ணம் தீட்டும் பணிகள் நடக்கின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !