உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழுக்குச்சுவாமி கோவிலில் 101வது குருபூஜை விழா

அழுக்குச்சுவாமி கோவிலில் 101வது குருபூஜை விழா

ஆனைமலை; ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சுவாமி கோவிலில், 101வது குருபூஜை விழா நடந்தது.ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் குருபூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேற்று, 101வது குருபூஜை விழா காலை, 6:00 மணிக்கு, கொடி கம்பம் நடுதல் நிகழ்வுடன் துவங்கியது.தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு கஞ்சி வழங்குதல், 11:30 மணிக்கு ஜோதி வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு ஆன்மிக பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !