கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தேரோட்டம்
ADDED :1873 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் தேரோட்டம் கொரோனா காரணமாக கோவிலுக்குள்ளேயே நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம் கொரோனா ஊரடங்கால் நடைபெறவில்லை.தற்போது தளர்வு காரணமாக 10 நாட்களுக்கு முன் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் தேரோட்டத்தையொட்டி, சிறிய தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலுக்குள் வலம் வந்தது.