உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

 உடுமலை: உடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை, நேற்றும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், நாள் முழுவதும் பக்தர்கள் மூலவர் தரிசனத்திற்கு அனுமதிக்க வில்லை. உடுமலை அருகே, திருமூர்த்திமலை அடிவாரத்தில்,பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, கன மழை பெய்து வருகிறது.


கடந்த, 3ம் தேதி, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முழுவதும், திருமூர்த்திமலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது.சுற்றுப்பிரகாரத்திலுள்ள கன்னிமார் கோவில், மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளிலும், பல அடி உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்தது. பக்தர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, கோவில் நடை சார்த்தப்பட்டது. நாள் முழுவதும் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !