உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதியமான் கோட்டையில் காலபைரவர் ஜெயந்தி சிறப்பு பூஜை

அதியமான் கோட்டையில் காலபைரவர் ஜெயந்தி சிறப்பு பூஜை

தர்மபுரி: காலபைரவர் ஜெயந்தியையொட்டி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், தர்மபுரி மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் வருவர்.


அன்றைய நாளில், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று, காலபைரவர் ஜெயந்தியையொட்டி காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம் உள்ளிட்ட, பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 11:30 மணிக்கு கொடியேற்றம், 12:00 மணிக்கு சிறப்பு யாகம் மற்றும், 108 சங்கு பூஜை நடந்தது. பகல், 1:00 மணிக்கு, உற்சவர் தட்சணகாசி காலைபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !