நடனபாதேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :2101 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் உள்ள ஆனந்த கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.இதையொட்டி சிறப்பு யாகமும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம் தீபாராதனை் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கைலாசநாதர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.