குழம்பேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
ADDED :1860 days ago
உத்திரமேரூர்; உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோவிலில், பாலாலயம் மற்றும் திருப்பணி துவக்க விழா, நேற்று நடந்தது.உத்திரமேரூரில், இரண்டாம் குலத்துங்க சோழ காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும், குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது.சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.அதன்படி, புதிய கற்கோவில் அமைப்பதற்கான திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, நேற்று காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் பாலாலயம் நடந்தது.தொடர்ந்து, கலச பூஜை, யாக சாலை பூஜை நிறைவு பெற்ற பின், கோவில் புதுப்பிப்பதற்கான திருப்பணி துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.