குன்றத்து கோயிலில் டிச.21 திருவாதிரை திருவிழா
ADDED :1777 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா டிச., 21ல் துவங்கி 30 ல் நிறைவடைகிறது.டிச., 21 மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை முடிந்து திருமுறை பாடப்பட்டு, மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்படும். டிச. 29ல் கோயிலுக்குள் கண்ணுாஞ்சல் முடிந்து, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், கோயில் முன் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய ராட்டிணத்தில் எழுந்தருளி ராட்டின திருவிழா நடக்கும்.டிச., 30 அதிகாலை கோயில் மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைல காப்பு சாத்துப்படியாகி, உற்ஸவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.