ஐயப்பசுவாமிக்கு ஆராட்டு விழா
ADDED :2093 days ago
சோழவந்தான் : சோழவந்தான் தென்கரை ஐயப்பன் கோயில் சார்பில் வைகை ஆற்றில் சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.முன்னதாக நேற்று காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி காலை 9:00 மணிக்கு கோயிலில் இருந்து செண்டை மேளம் முழங்க யானை ஊர்வலத்தில் வந்த சுவாமி வைகையில் எழுந்தருளினார். சுவாமிக்கு சந்தனம், இளநீர், நெய் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமி ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அனைத்து ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.