உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் வைகாசி விழா: இன்று திருக்கல்யாணம்!

பெருமாள் கோயிலில் வைகாசி விழா: இன்று திருக்கல்யாணம்!

பரமக்குடி: எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையைச் சேர்ந்த பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலின், 210வது வைகாசி பிரம்மோத்சவம் மே 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. வரதராஜப் பெருமாள் தினந்தோறும் அன்ன, சிம்ம, சேஷ, கருட, அனுமார், யானை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்தார்.  இன்று (மே 30) காலை 10.30க்கு திருக்கல்யாண உற்சவம், மாலையில் புஷ்பபல்லக்கில் வீதியுலா நடக்கிறது. ஜூன் 1ல் மாலை 4.30க்கு தேரோட்டம், அடுத்த நாள் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. தொடர்ந்து 105வது வைகாசி வசந்தோத்சவ விழாவில், ஜூன் 3 இரவில், பெருமாள் அழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார். மறுநாள் காலை குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வண்டியூரை அடைகிறார். ஜூன் 5ல் மாணிக்கா மண்டகப்படியில் மண்டூக மகரிஷி சாப விமோசனம், தொடர்ந்து கருட, அனுமார் வாகனத்திலும், ஜூன் 8 இரவு ஆண்டாள் மாலையுடன் அழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில் இரவு வீதியுலா வந்து, மறுநாள் காலை கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !