கொடைக்கானல் மலைப்பகுதியில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :1759 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கொடைக்கானல் வரதராஜ பெருமாள், பண்ணைக்காடு ராமர் கோயில், மாய அழகர், கள்ளழகர், வெங்கடாஜலபதி ,தாண்டிக்குடி சௌமியநாராயணப் பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது .முன்னதாக அன்னதானங்கள் நடந்தது.