உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கிகுளம் கைலாசநாதர் கோயிலில் ஜூன் 1ம் தேதி பிரதிஷ்டை தினவிழா!

சிங்கிகுளம் கைலாசநாதர் கோயிலில் ஜூன் 1ம் தேதி பிரதிஷ்டை தினவிழா!

திருநெல்வேலி : நான்குநேரி சிங்கிகுளம் ஆவுடையம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் பிரதிஷ்டா தின விழா வரும் 1ம் தேதி நடக்கிறது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (31ம் தேதி) ருத்ரஜெபம், அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம், சண்டி பாராயணம் நடக்கிறது. ஜூன் 1ம் தேதி காலை 7 மணிக்கு சண்டி ஹோமம், அபிஷேகம், ஆராதனை, பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் எஸ்.வி.எஸ்.மணி அய்யர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !