அரியலூர் மகாசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
அரியலூர்: அரியலூர் பெரிய அரண்மனை தெருவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, ஸ்ரீ மகாசக்தி விநாயகர் கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய அப்பகுதி மக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்த அரியலூர் தாசில்தாரும் திருப்பணி குழு தலைவருமான துரை முத்துவடிவேல், திருப்பணிக்குழு துணை தலைவரும் தியாகி நாராயணசாமி பிள்ளை அறக்கட்டளை மேலாண்மை இயக்குநருமான துரை அர்ச்சுணன், செயலாளர் திருமூர்த்தி, பொருளாளர் அசோக்குமார், துணை செயலாளர் சுப்ரமணியன், ஆனந்த், நிர்வாகி பாலசுப்ரமணியன் உள்ளிட்டோரை கொண்ட திருப்பணி குழு சார்பில், கடந்த ஆண்டு துவங்கிய கோவில் திருப்பணி துவங்கி, நவீன கட்டிட கலை நயத்துடன் ஸ்ரீமகாசக்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி காலை 8 மணியளவில் நடக்கவுள்ள, ஸ்ரீ மகாசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள், 30ம் தேதி இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை, அரியலூர் அண்ணா நகர் செல்வ முத்துக்குமார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செயல்படுத்துகின்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை, துரை அர்ச்சுணன் உள்ளிட்ட திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.