ஒரே நாளில் ஓராண்டு பலன்
ADDED :1858 days ago
ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இதில் மூன்று சிறப்பானவை.ஆனி சயன ஏகாதசி, கார்த்திகை உத்தான ஏகாதசி, மார்கழி வைகுண்ட ஏகாதசி. இதில் வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் ஆண்டில் வரும் எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலன் கிடைக்கும். சாதாரண ஏகாதசி நாளில் விரதமிருக்க இயலாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருக்கலாம். விரதமிருப்பவர்கள் பெருமாள் கோயில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும். அதிலும் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் தரிசிப்பது சிறப்பு.