அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
ADDED :1842 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில், நேற்று மார்கழி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள சிறிய நந்தி, அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, ஆகியவற்றிற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதேபோன்று, கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. நேற்று, சனிப்பெயர்ச்சியையொட்டி, ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.