உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகல சங்கடங்கள் அகல அருள்வாய் சனீஸ்வரரே!

சகல சங்கடங்கள் அகல அருள்வாய் சனீஸ்வரரே!

 உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், சனிப்பெயர்ச்சியையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


சனிப்பெயர்ச்சி, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. நேற்று, அதிகாலை, 5:22 மணிக்கு, சனிபகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். வழக்கமான சனிப்பெயர்ச்சி பூஜைகளில், பக்தர்கள் கூட்ட நெரிசலோடு கோவில் வளாகங்கள் நிறைந்து காணப்படும். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, வழிபாடு செய்ய, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், வரிசையாக காத்திருந்து, ஏராளமான பக்தர்கள், சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், முத்தையா பிள்ளை லே அவுட் சக்தி விநாயகர் கோவில்களில், நவகிரங்களில் உள்ள சனிபகவானுக்கு, சிறப்பு அபிேஷகம் நடந்தது. மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. குட்டை திடல் சித்திபுத்தி விநாயகர் கோவில், வடக்கு குட்டை வீதி ஆதிசக்தி விநாயகர் கோவிலில் உள்ள சனிபகவான் சன்னதியில், அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு வழிபட அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !