திண்டுக்கல்லில் சனிப்பெயர்ச்சி விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வரர், அபிராமியம்மன், கோட்டை மாரியம்மன், ரயிலடி சித்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, நேருஜி நகர் நவ சக்தி விநாயகர், தாடிகொம்பு சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயிலில் சுவாமி மற்றும் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் யாகம் நடந்தது. ஏராளமானோர் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் சிறப்பு பூஜைகள், வேள்வி நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலச நீரால் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. உதவி ஆணையர் செந்தில்குமார் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நத்தம்: நத்தம் கைலாசநாதர் கோயிலில் சனீஸ்வரருக்கு 108 கலசங்கள் வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், நடந்தது. கைலாசநாதர், செண்பகவல்லி அம்மன் சன்னதிகளில் பூஜை, ஆராதனை நடந்தது. மாலை நடந்த பிரதோஷ விழாவில் நந்தி சிலைக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி, கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சனிப்பெயர்ச்சி ேஹாமம் நடந்தது. மூலவர், உற்ஷஓவர், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதே போல், சின்னாளபட்டி சதுர்முக முருகன், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ---பிரதோஷ வழிபாடு: கன்னிவாடி கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்ஷவர், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதே போல், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சனிப்பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தது.