உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதபுரீஸ்வரர் கோவிலில் சிவசிந்தனை நடைபயணம்

வேதபுரீஸ்வரர் கோவிலில் சிவசிந்தனை நடைபயணம்

 புதுச்சேரி : வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து கோட்டக்குப்பம் செல்லும் சிவ சிந்தனை நடைபயணம் நேற்று நடந்தது. புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து காலை 7:30  மணிக்கு சிவ சிந்தனை நடைபயணம் துவங்கியது.காந்தி வீதி, முத்தியால்பேட்டை வழியாக கோட்டக்குப்பத்தில் உள்ள பழமையான அனந்தீஸ்வரர் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு அபிஷேகம்  ஆராதனை, அன்னதானம் நடந்தது. நடைபயணத்தில் புதுச்சேரி, தமிழக பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள், சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர். நடைபயணத்தின் போது, சிவபஞ்சாட்சாரம், திருமுறைகள்  ஓதிக்கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !