உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த சிறப்புத் தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நடராஜர் சுவாமி தேர் ஆடி அசைந்து வந்தது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா, கடந்த, 21ல் துவங்கியது. கொரோனா தொற்று காரணமாக வரும் 31 ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்ததால் தேர் மற்றும் தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. முதல்வர் உத்தரவின் பேரில் தேர் விழாவில் 1000 பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்ததை தொடர்ந்து, இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்புத் தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நடராஜர் தேர் ஆடி அசைந்து வந்தது. பின்னால் தொடர்ந்து மீனாம்பிகை தேர் வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !