வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :1748 days ago
திருவாலங்காடு : திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு, ஆருத்ரா அபிஷேகம் நடந்தது. ஆருத்ரா மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமானுக்கு இரவு முதல், அதிகாலை வரை பல்வேறு அபிஷேகம் செய்விக்கப்பட்டது.இன்று, அதிகாலை, 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடைபெற்றது. குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.