உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஊட்டி: நீலகிரியில், சுற்றுலா பயணிகளின் புத்தாண்டு கொண்டாடங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக நேற்று இரவு, 10 மணிக்கு மேல், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. தளர்வுக்கு பின், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட், காட்டேஜ்களில் புத்தாண்டை வரவேற்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அரசு உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்காக வந்த சுற்றுலா பயணிகளும் திரும்பி சென்றனர். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில்," நீலகிரியில், இரவு நேரம், பொது இடங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் அரசின் நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கண்காணிக்க போலீசார், வருவாய் துறையின் சிறப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால், சீல் வைக்கப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !